வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் மதியழகன் சுகந்தியின் ஊடக சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவினர்களால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வுள்ளதாக இதன் போது குறிப்பிட்டார்.
குறித்த போராட்டத்திற்கு அனைத்து விதமான தரப்பினது ஒத்துழைப்பினை வேண்டி நிற்பதாகவும் அனைத்து தரப்பினரும் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஒன்று கூடுமாறு இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1