இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரைப் பற்றி சில ஊடகங்கள் மற்றும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வெளியிட்ட அறிக்கைகளில் உண்மையில்லை. குறிப்பிடப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை தற்போது நீதிமன்றில் உள்ளதால் அக்கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் நீதிமன்றம் இன்னும் தீர்மானம் வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளதால் வேறு எந்த அதிகாரியின் நியமனங்கள் மற்றும் தீர்மானங்களுக்கு செல்லுபடியாகாது என முன்னாள் ஜனாதிபதி தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.