34 வருடங்கள் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!

Date:

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபட இன்றையதினம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

கடந்த முப்பது வருட காலத்திற்கும் மேலாக இரானுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டநிலையில் அங்கு சென்ற பொது மக்கள் ஆலயத்தை சிரமதானம் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆலயத்திற்குச செல்ல அனுமதிக்கப்பட்டதை மிகவும் சந்தோசமாக வரவேற்ற பொது மக்கள் ஆலயம் சிதைவடைத்திருப்பதை பார்த்து கடும் மனவேதனை அடைந்திருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிருஷ்ணன் ஆலயம் என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் வழிபட பொதுமக்கள் அனுமதி கோரியதால் அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பரிசீலிப்பதாகவும் வலிகாமம் வடக்கிலுள்ள ஏனைய காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்