பெண்கள் இல்லாத இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், இம்முறை பெண்கள் எவரும் போட்டியிடவில்லை.

கடந்த 1999ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க போட்டியிட்டு, வெற்றியீட்டியதே, பெண் வேட்பாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய இறுதி சந்தர்ப்பமாகும்.

2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எந்த பெண் வேட்பாளரும் போட்டியிடவில்லை.

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க 1988 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அதேவேளை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமா திஸாநாயக்க
(மறைந்த திரு. காமினி திசாநாயக்கவின் மனைவி) 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

நாட்டின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்களாவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5.8 சதவீத பெண்கள் உள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அக்மீமன தயாரதன, பத்தரமுல்ல செளரதன ஆகிய இரண்டு பிக்குகள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

நான்கு தமிழ் மற்றும் முஸ்லிம். மலையக வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பி அரியநேத்திரன், முகம்மது இல்லயாஸ்,
அபூபக்கர் இன்பாஸ், மயில்வாகனம் திலகராஜா ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து உறுப்பினர்களும் போட்டியிடுகிறார்கள்.

சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, ரொஷான் ரணசிங்க, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- சரத் கீர்த்திரத்ன, கே.கே.பியதாச, சிறிபால அமரசிங்க, அனுர. சிட்னி ஜயரத்ன மற்றும் அனுருத்த பொல்கம்பல ஆவர்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்