ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
26 வயதுடைய நபரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் கவுந்திஸ்ஸ புர, ஸ்ரீ புரவில் வசிப்பவர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபர்களைக் கண்டறியும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1