Pagetamil
இலங்கை

எலும்புத்துண்டுக்காக தமிழர்களின் வரலாற்று தொன்மையை சீரழிக்காதீர்கள்: கிழக்கு ஆளுனருக்கு எச்சரிக்கை

“கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது” தமிழரின் வரலாற்று தொன்மையை சீரழிக்கும் நடவடிக்கையை ஆளுநர் தொடர்ந்தால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

கிழக்கின் முதுசமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அடாவடிகளை வன்மையாகக் கண்டிப்பதோடு ஆலயச் செயற்பாடுகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமென்று கோருகின்றோம்.

ஆளுநரின் அடாவடிகள் தொடர்ந்தால் வடக்குக் கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை இத்தால் சம்பந்தப்பட்டோருக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்பதை ஆளுநர் அறிய வேண்டும்.

அரசின் எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கைவிடுமாறு கிழக்கின் ஆளுநரைக் கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment