27.8 C
Jaffna
September 15, 2024
இந்தியா

சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மேல்முறையீடு

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்க துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 12ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையில் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்தவழக்கில் கேஜ்ரிவால் கடந்த ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஜூலை 29 ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ கோரிக்கையை ஏற்று கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீதிபதி காவேரி பவேஜா ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் முறையிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை உயர் நீதிமன்ற நீபதி நீனா பன்சால்கிருஷ்ணா கடந்த 5ஆம் தேதி நிராகரித்தார். “கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்றோ அல்லது எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் செய்யப்பட்டதாகவோ கூறமுடியாது” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் உயர் நீதிமன்றமுடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக பட்டியலிட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம்மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நேற்று கேட்டுக்கொண்டார். இதற்கு, “இக்கோரிக்கை தொடர்பாக மின்னஞ்சல் அனுப்புங்கள். நான் பரிசீலிக்கிறேன்” என்று தலைமை நீதிபதி கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபான கொள்கை ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்

Pagetamil

இந்திரா காந்திக்கு எதிராக நின்ற ஆளுமை: இந்திய அரசியல் களத்தில் சீதாராம் யெச்சூரி யார்?

Pagetamil

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை: போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

Pagetamil

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் உண்ணாவிரத போராட்டம்

Pagetamil

இளம் பெண்ணுக்கு சயனைடு கொடுத்து கொலை: கணவர், மாமியார் உட்பட 4 பேர் கைது

Pagetamil

Leave a Comment