22 பாடசாலை மாணவர்களால் கூ்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதக கூறப்படும் 16 வயதான பாடசாலை மாணவியின் தாயார், சட்ட வைத்திய அதிகாரி மீது குற்றம்சுமத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை சட்ட வைத்திய அதிகாரி, மருத்துவமனையில் தனது மகளை பரிசோதித்த போது திட்டி மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக, தனமல்வில பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார், பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார். .
சட்ட வைத்திய அதிகாரியின் கோபத்திற்குப் பிறகு தனது மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தாய் கூறினார். சிறுமி பொய் சொன்னதாக சட்டவைத்திய அதிகாரி குற்றம் சாட்டியதாக தாய் கூறினார்.
மருத்துவமனையில் மேல் தளத்தின் ஜன்னலில் இருந்து குதிக்க தனது மகள் முயற்சித்ததாகவும், ஆனால் அவர் அதை தடுத்ததாகவும் அந்த தாய் கூறினார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிறுமியை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சந்தேகத்தின் பேரில் 21 மாணவர்களும் ஒரு மாணவியின் தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையின் போது, தான் கூட்டு பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பு கட்டாயப்படுத்தி மதுபானத்தை அருந்த வைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.