திருகோணமலை பிரதான கடற்கரையில் இறந்த நிலையில் பல இலட்சக்கணக்கான நண்டுகள் கரை ஒதுங்கி உள்ளன.
இன்று (10) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சிவப்பு நிறத்திலான சிறு நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளதனை அவதானிக்ககூடியதாக இருந்தது.
கடற்கரையில் சுமார் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரையான நீளத்தில் சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளதனை அவதானிக்க முடிந்தது.
நண்டுகள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மக்கள் மத்தியில் சிறு அச்சம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் இவ்வாறு இறந்த நிலையில் நண்டுகள் கரை ஒதுங்கியமையால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடற்கரையை துப்புரவு செய்யும் பணியை திருகோணமலை நகர சபை செயலாளர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-