தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய ஒரே ஒரு பேசுபொருளாக இருக்கின்ற ஜனாதிபதித் N;தர்தலில் 25க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை மையமாக வைத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்குமாக தமிழ்ப் பொது வேட்பாளராக மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் பெயர் குறிப்பிட்டிருக்கின்றது.
தற்போது உண்மையிலேயே தமிழ் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. அது கடந்த காலங்களிலே இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களினாலும், 1978ம் ஆண்டு நிறைவேற்று ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டதில் இருந்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு ஜனாதிபதிகளும் தமிழ் மக்களது பிரச்சனைகளை ஏரெடுத்தும் பார்க்காமல் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதைக் கூட கணக்கெடுக்காத நிலையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியிலே தோற்றம் பெற்றது. இந்நிலைப்பாடு தமிழ் மக்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை, தற்போதும் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இங்கு நடத்தப்படுகின்றார்கள் என்பதையும், 2009க்கு முன்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் ஒன்றாக இருந்ததைப் போன்று தற்போதும் ஒன்றாக நின்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற அடிப்படை உணரப்பட்டே தோற்றம் பெற்றது.
இதனூடாக தென்னிலங்கையிலே ஜனாதிபதியாக வர ஆசைப்படும் வேட்பாளர் எங்களுடன் பேரம்பேசுகின்ற ஒரு நிலைப்பாடு உருவாகலாம் என்ற நோக்கமும் இதனுள் உண்டு. பெரும்பாலும் சிங்களப் பகுதிகளிலே நான்கு பேருக்கிடையில் ஒரு போட்டி நிலவக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இதில் வெல்லக கூடிய வேட்பாளர்கள் எங்களுடன் பேசுவதற்கான காலமும் தற்போது இருக்கின்றது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கின்ற நிலையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு, பரிசீலிப்பதற்கான நியாயமான தீர்வான்றை இவர்கள் முன்வைப்பார்களாயின் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வது உகந்ததாக இருக்கும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
ஏனெனில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையில் எங்கள் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு வேட்பாளர்களில் எவராவது பரிசீலிப்பார்களாக இருந்தால், அதற்கான உத்தரவாதங்களைத ருவார்களாக இருநதால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்திய தரப்பினரை பேசுவதற்கு அழைத்தால் அவர்களுடன் பேச வேண்டிய தேவைப்பாடும் எங்கள் மத்தியில் இருக்கின்றது.
அவ்வாறு எங்கள் கோரிக்கைகள் நியாயமாகப் பரிசீலிக்கப்படாதவிடத்து, தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருந்து இன்னும் சிங்களத் தரப்பிலே ஜனாதிபதியாக வருபவர்கள் எங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தயாராக இல்லை என்ற விடயத்தை உறுதியாக வெளி உலகத்திற்குச் சொல்வதற்கும், எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். இந்த நிலையில் நாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை முன்னெடுத் விடயம் சரியானது என்பதை நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலையும் இங்கு உருவாகும் என்று தெரிவித்தார்.