Pagetamil
இலங்கை

1000 வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளை அங்கீகரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்

1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளை அங்கீகரிக்கும் வகையிலான மருத்துவ சட்டத் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் டொக்டர். ரமேஷ் பத்திரன, உலகளாவிய தரவரிசையில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளை இலங்கை அங்கீகரிக்க இயலும். உலக தரவரிசையில் முதல் 1000 மருத்துவக் கல்லூரிகளை நாங்கள் அங்கீகரிப்போம்,” என்றார்.

“வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து தகுதி பெற்ற சுமார் 300 இலங்கை மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் தகுதி பெற்ற மருத்துவக் கல்லூரிகளை நமது நாடு அங்கீகரிக்காததால் அவர்கள் இலங்கையில் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இந்த புதிய சட்டமூலத்தின் மூலம் அவர்கள் இலங்கையில் பணிபுரிய முடியும், ஏனெனில் அவர்கள் தகுதி பெற்ற பல்கலைக்கழகங்களை இலங்கை அங்கீகரிக்கும், ”என்று அமைச்சர் கூறினார்.

“இது அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் உட்பட சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வைக் கண்டறிய எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

புலம்பெயர்ந்த சில வைத்தியர்கள் தமக்கு வேலை கிடைத்த நாடுகளின் நிலைமையை விட இலங்கையின் நிலைமை சிறந்ததாகக் காணப்பட்டதால், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். “புதிய சட்டம் இந்த மருத்துவர்கள் திரும்புவதற்கு உதவும்,” என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment