26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

முச்சக்கர வண்டியை 88 Km தூரம் பின்னோக்கி செலுத்தி இலங்கையர் சாதனை!

முந்தல், முக்குத்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர்நேற்று (08) முச்சக்கரவண்டியை பின்னோக்கி அதிக தூரம் ஓட்டி சாதனை படைத்தார்.

செரண்டிஃப் உலக சாதனை நிறுவனத்தின்கண்காணிப்பாளரின் முன்னிலையில் நிஷாந்த பண்டார என்பவர் இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதனை படைக்கும் முன் முக்குதொடுவாய், மன்சந்தியில் நடைபெற்ற வைபவத்திற்கு பல மத தலைவர்கள் நிஷாந்த பண்டாரவை ஆசிர்வதித்தனர். அத்துடன் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  உதய குமாரவின் பணிப்புரையின் பேரில் முந்தல், மதுரங்குளி, நுரைச்சோலை மற்றும் கல்பிட்டி பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் வீதிகளை முறையாக தயார் செய்து நிஷாந்தவின் பணியை வெற்றியடையச் செய்வதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

முந்தல் முக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து மதுரங்குளிக்கு வந்து கல்பிட்டி வீதியில் பாலவி சந்தியில் இருந்து பாலக்குடா சந்திக்கு திரும்பி தலவில தேவாலயத்திற்குச் சென்று மீண்டும் முக்குத்தொடுவாய் திரும்பினார்.

நிஷாந்த பண்டார முச்சக்கரவண்டியை மூன்று மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் 47 வினாடிகளில் குறித்த பாதையின் 88 கிலோமீற்றர் தூரத்தில் பின்னோக்கி ஓட்டி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார்.

நிஷாந்த பண்டார இலங்கை விமானப்படையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

உலக சாதனை படைக்கும் முன், கடந்த பெப்ரவரி மாதம் பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு, உலக சாதனை படைக்க இப்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக சாதனையை நிலைநாட்டிய பின்னர், செரண்டிப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் நிஷாந்தவின் வெற்றி தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் பிற பரிசுகளை வழங்கியது.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான நிஷாந்த பண்டார முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரிகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

Leave a Comment