முன்னாள் டிஐஜி வாஸ் குணவர்த்தனவின் மரண தண்டனை உறுதியானது!

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்தது.

2013 ஆம் ஆண்டு, பம்பலப்பிட்டி பகுதியில் வசிக்கும் மொஹமட் ஷியாம் என்ற கோடீஸ்வர வர்த்தகரை கடத்திச் சென்று கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று போலீஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குவர்.

இந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி வாஸ் குணவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்