சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாளை வெள்ளிக்கிழமை (9) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் பொன்சேகா, தனது அரசியல் எதிர்காலம் குறித்து தனது விசேட அறிக்கை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொன்சேகா, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்த பின்னர் நாட்டை வந்தடைந்த போது இதனை தெரிவித்தார்.




