Pagetamil
கிழக்கு

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு என வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – திருமலை சட்டத்தரணிகள் சங்கம்

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனவும் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது

கடந்த 05.08.2024 திகதி வெளியிடப்பட்ட தேசிய பத்திரிகையான வீரகேசரி பத்திரிகையில் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆதரவு ஜனாதிபதிக்கு எனும் தலைப்பில் முதல் மற்றும் ஆறாம் பக்கங்களில் குறிப்பிடப்பட்ட செய்தியின் உண்மைத்தன்மை பற்றி தெளிவுறுத்தும் ஊடகசந்திப்பு இன்று (06) திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் இன்று காலை 8.45 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.சி.சபருள்ளா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலைக்கு வருகை வந்திருந்த நிலையில் ஜனாதிபதி அவர்கள் பல வகையான மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு இடம் பெற்ற சந்திப்புகளில் ஓர் அங்கமாக திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியாகவும், அரசியல் அபிலாசைகளுக்காகவும் மாத்திரம் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்ததாக வீரகேசரி பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் இவ்வாறு விரகேசரி பத்திரிகையில் குறித்த செய்தி வெளியான விடயம் என்பது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் இலங்கையின் பிரசித்தி பெற்ற ஒரு நாளிதழ் மக்களை இவ்வாறு பிழையாக வழிநடத்துவது என்பது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தமது கண்டணத்தை வெளியிட்டுள்ளனர்.

குறித்த செய்தி தொடர்பில் தீர விசாரித்து வீரகேசரி நாளிதழ் குறித்த செய்தியினை வெளியிடாமை பத்திரிகை தர்மத்தின் பிழையான தீர்மானத்தினை வெளிக்காட்டுவதாகவும், வீரகேசரி பத்திரிகையானது குறித்த தவறான செய்தியை கை வாங்கி, குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் வீரகேசரியின் அதே முன்பக்க செய்தியில் வெளியிட வேண்டும் எனவும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்

எமது சட்டத்தரணி சங்கமானது சுயாதீனமான சங்கம் என்பதுடன் எந்த கட்சிகள் சார்ந்தோ, மதம் சார்ந்தோ அல்லது மொழி சார்ந்து செயற்படும் சங்கம் இல்லை எனவும் நீதிக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடக்கூடிய சங்கம் எனவும் இவ்வாறான ஒரு சங்கத்தினால் எடுக்கப்படாத ஒரு முடிவை எடுத்ததாக கூறி இவ்வாறு செய்தி வெளியிடுவது என்பது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் குறித்த வீரகேசரி பத்திரிகைக்கு எதிராக கோரிக்கை கடிதம் ஒன்றினையும் திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறு ஜனாதிபதியின் திருகோணமலை விஜயத்தின் போது எந்தவொரு நிகழ்விற்கும் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் குறித்த செய்தியானது பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அக்கரைப்பற்றில் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்

east tamil

திருகோணமலையில் மணல் அகழ்வு பிரச்சினை: ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சரின் கலந்துரையாடல்

east tamil

மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஜம்சித்

east tamil

10ம் கட்டை ஹோட்டலில் தீ!

east tamil

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

east tamil

Leave a Comment