வடமராட்சி, நெல்லியடியில் 9 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய 34 வயதான ஆசாமி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
துன்னாலை மத்தியை சேர்ந்த 9 வயதான சிறுமியொருவர் தனது பேத்தியாரின் வீட்டுக்கு சென்ற போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டிற்கு வந்திருந்த சந்தேகநபரும், மனைவியும் சில நாட்கள் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவருடன் மது அருந்தியுள்ளார். பின்னர், இரவில் சிறுமியை வீட்டிலிருந்து வெளியே தூக்கிச் சென்று அருகிலுள்ள காணிக்குள் வைத்து, சிறுமியை பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லியடி பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1