யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
த்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத் திசை நோக்கி பேருந்து, ஹயஸ் வாகனம், டிப்பர் என்பன ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துள்ளன.
இதன் போது, டிப்பர் வாகனம் ஹயஸ் மீது மோத, ஹயஸ் பேருந்தை மோதியது.
விபத்து காரணமாக ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் , பேருந்தின் பின்பகுதி, டிப்பரின் முன்பகுதி என்பன சிறியளவில் சேதமடைந்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1