யாழில் சம்பவம்: கணவனை கொன்றது மனைவியா?

Date:

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தரே இதில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி அதிகாலை வெளிமாவட்டத்தில் இருந்து வாகனம் ஒன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டு , அவருக்கு விநியோகம் செய்த பின்னர் வாகனம் திரும்பி சென்றுள்ளது.

அதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்த போது, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்த போது, வாள் முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது.

வாள் வெட்டில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அந்நிலையில், குடும்பஸ்தரின் கொலையை, நகைக்கான கொலையாக மாற்றவே நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்த நிலையில், கொலையானவரின் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்