இந்திய காதலனை சந்திக்க எல்லை தாண்டிய பாகிஸ்தான் காதலி

Date:

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் தைச் சேர்ந்த மேவிஷ், லாகூரைச் சேர்ந்த பதாமி பாக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 மற்றும் 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு மேவிஷும் குவைத்தில் வேலை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரைச் சேர்ந்த ரஹ்மானும் சமூக வலைதளம் மூலம் நண்பராகி உள்ளனர். நட்பு காதலாக மலர்ந்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர். அடுத்த 3 நாட்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 2023ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் மெக்காவுக்கு சென்ற இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் மேவிஷ் இஸ்லாமாபாத் சென்றுவிட்டார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத் திலிருந்து லாகூர் சென்ற மேவிஷ், கடந்த 25அம் தேதி பஞ்சாபின் வாகா எல்லை வழியாக இந்தியா வந்துள்ளார்.

இவருடைய ஆவணங்களை பரிசீலித்த இரு நாட்டு அதிகாரிகளும் 45 நாள் சுற்றுலா விசா வழங்கி உள்ளனர். அதன் பிறகு ரஹ்மானின் சொந்த ஊரான பிதிசார் கிராமத்துக்கு சென்றுள்ளார். அவரை ரஹ்மான் குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்