பிரான்ஸ் காவல்துறை, அந்நாட்டின் ரயில்சேவையை முடக்கும் நாசவேலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தீவிர இடசாரி இயக்கத்தைச் சேர்ந்தவரைக் கைது செய்திருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருசில மணி நேரம் இருக்கும்போது ரயில்சேவை முடங்கியது.
இதனால் 100,000 பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாசவேலை நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (19 ஜூலை) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்குமுன் மூன்று இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் தீவைத்ததாக நம்பப்படுகிறது.
ஆறு வட்டாரங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. தலைநகர் பாரிஸ் பாதிக்கப்படவில்லை.
தீவிர இடசாரிகளுக்கு அந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் ஜெரல் டாமனா கூறியிருந்தார்.