மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்படுவார் என இன்று (29) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதன் மூலம் அறிவிக்கப்பட்டது.
மூன்று மொழிகளிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்தில் கல்வி பயின்ற நுவன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார்.
தனது சொந்த பிரதேசமான மெதொட்டமுல்லை குப்பை மேட்டை அகற்றும் போராட்டத்தை முன்னெடுத்த நுவான் போபகே, பல பொதுப் போராட்டங்களில் முன்னோடியாக பங்கு வகித்தார்.
சுன்னாகம் மின் நிலைய வழக்கிலும் பொதுமக்கள் சார்பில் பங்கேற்றிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1