தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர், பாடசாலையில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதாகவும், இதனால் மாணவனின் காதுப்பகுதி பாதிக்கப்பட்டதாகவும், மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.
காதுப்பகுதி சிவந்து வீங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், மாணவனின் காது பாதிக்கப்பட்டதாகவும் பெற்றோர் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
வகுப்பறையில் நடந்த விவகாரமொன்றையடுத்து மாணவனை இழுத்துச் சென்று ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1