Pagetamil
கிழக்கு

ஆட்டிறைச்சி விவகாரத்தில் 4 பொலிசார் இடைநிறுத்தம்

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சி காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிசார் கைது செய்திருந்தனர்.

பின்னர் குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். அவரது சார்பில் தோன்றிய சட்டத்தரணி தனது குறித்த ஆட்டினை தனது வீட்டு நிகழ்வு ஒன்றிக்கு அறுத்திருந்தாகவும் குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு குறித்த சான்றுப் பொருளை பார்வையிட நீதிவான் சென்ற வேளையில் ஆட்டிறைச்சி மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்க தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிசார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தி இருந்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான் பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார். அதன்போது குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் யாவும் மாயமாக மறைந்திருந்தன.குறித்த ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் கூட தொலைந்து போயிருந்தன. இது பற்றி வினவியபோது ஆட்டிறைச்சியை சில பகுதிகளை தேடுதலுக்குச் சென்ற பொலிசார் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை மேற்கொண்டு அதனடிப்படையில் குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.

இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும் ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவுருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் தொழிற்சந்தை நிகழ்வு

east tamil

திருகோணமலை புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

east tamil

சிங்களமயப்படுத்தப்படும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை

east tamil

சாகாமம் பாலம் போக்குவரத்து தடை: பெரும் சிரமத்தில் விவசாயிகள், சாரதிகள்

east tamil

பொலிஸ் நிலையத்தை மீட்ட குகதாசன்

east tamil

Leave a Comment