ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியான ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முந்தைய நாள் (14) நண்பகல் 12 மணிக்கு முன்னர் அல்லது அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் வேட்பாளர்களின் கட்டுப் பணம் செலுத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.




