2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவை 50000 ரூபா ரொக்கப் பிணையிலும., 50000 ரூபா பெறுமதியான இருவரின் சரீரப்பிணையிலும் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஹிருணிகாவுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் தண்டனையை எதிர்த்து ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
தெமட்டகொடவில் கடத்தப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட அமில பிரியங்கரை கடத்தலுக்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தல், அச்சுறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் உட்பட 18 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாக காணப்பட்டார்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸவும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டாரவும் ஆஜராகியிருந்தனர்.