ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக குறிப்பிட்டு, சில சிறிய கட்சிகளும், சில தனிநபர்களும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போவதாக குறிப்பிட்டு, இந்த சிறு குழு இன்று இந்த நகைச்சுவை பாணி நிகழ்வை நடத்தியது. இந்த குழுவில் பெரும்பாலும் தோல்வியடைந்த அரசியல்வாதிகளே பங்கேற்றிருந்தனர்.
வெளிநாட்டு தூதரங்களில் பணம் பெற்று, சிவில் சமூகமென்ற பெயரில் செயற்படும் சில தனிநபர்கள், தம்மை தமிழ் மக்கள் பொதுசசபை என்ற பெயரில் அழைத்துக் கொண்டனர். இந்த கும்பலும், சிறு கட்சிகளும் இணைந்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டு தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு எனும் பெயரில் செயற்பட போவதாக அறிவித்துள்ளன.
7 தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் கையொப்பம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கையொப்பமிட்ட 7 தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளும், குறைந்தபட்சம் 10 பொதுமக்களையாவது திரட்டும் வல்லமையற்றவர்கள். சிவில் சமூகமென்ற பெயரில் தனித்தனியாக செயற்படுபவர்கள்.
7 தமிழ் கட்சிகளில் பெரும்பாலனவற்றில் ஓரிரண்டு உறுப்பினர்களே உள்ளனர். இதில் கையெழுத்திட்ட எந்த கட்சியும் தனித்து செயற்பட முடியாதவை.
தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் இதில் அங்கம் பெற்றிருக்கின்றன.