தமிழ் பொதுவேட்பாளர்: அரசியல் கட்சிகள் நாளை கையொப்பமிடும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஆவணம் இதுதான்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென சில தரப்பினர் முன்னெடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று நாளை (22) கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர்களைான சிலர் சிவில் சமூகமென்ற பெயரில் அடையாளப்படுத்தி, அவர்கள் ஒன்றுகூடி- தம்மை தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற பெயரில் அமைப்பாக அறிவித்துள்ளனர். இந்த சிறு கும்பலும், நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்ட அரசியல் கட்சிகளும் சமதரப்பாக குறிப்பிட்டு, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகிறது.

வன்னி, மட்டக்களப்பில் 3 நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை கொண்ட ரெலோ, யாழ்ப்பாணத்தில் தலா ஒவ்வொரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்ட புளொட், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன- தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக சில தனிநபர்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.

இதன்மூலம், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டிய பொறுப்புணர்வை அந்த தரப்புக்கள் மீறி, தவறான அரசியல் தீர்மானத்தை எடுப்பதாக கருதப்படுகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, இந்த சிறு குழுவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடுவதிலிருந்து விலகியுள்ளன.

கடந்த ஜூன் 29ஆம் திகதி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதாக திட்டமிடப்பட்டிருந்த போதும், அப்போது சாத்தியமாகியிருக்கவில்லை. இந்த நிலையில், நாளை (22) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்