தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளிமேடு பிரதேசத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் வயல் பிரதேசத்தில் காணப்படுவதை கண்ட பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து குறித்த சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை அன்புவளிப்புரம் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தம்பலகாமம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட (வயது-53) நபர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ் –
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1