26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

பொறுப்புணர்வின்றி தீர்மானம் மேற்கொண்ட ரெலோ, புளொட் கட்சிகள்!

சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் சிறு குழுவினால் முன்னெடுக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதென்ற முடிவை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளது.

இன்று (20) யாழ்ப்பாணம், கந்தரோடையிலுள்ள த.சித்தார்த்தனின் இல்லத்தில் நடந்த சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தும் தவறான தீர்மானம் என பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்ட போதும், சிவில் சமூகமென்ற பெயரில் சிறு குழு எடுத்த தீர்மானத்தை ஏற்று செயற்படுவதென  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர்.

தமிழ் மக்கள் சார்ந்த சரியான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள லேண்டிய பொறுப்புணர்வு, ரெலோ மற்றும் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள போதும், அந்த பொறுப்புணர்வை கவனத்தில் கொள்ளாமல் இந்த தவறான தீர்மானத்தை அவர்கள் இன்று மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 22ஆம் திகதி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

சல்லி கோவில் ஆக்கிரமிப்பு – 2

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

Leave a Comment