யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (18) பகல் 11.30 மணியளவில் எழுதுமட்டுவாழ் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரே கைது செய்யப்பட்டார். அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடுபவர்.
இரண்டு லொறிகளில் மணல் ஏற்றிச் சென்றவர்களிடம் 43000/= இலஞ்சமாகப் பெற்ற போது, யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிசால் கைது செய்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.




