சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு

Date:

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சீனாவிவ் சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகர் பகுதியில் 14 மாடிகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்துக்கு அதிகப்படியான மக்கள் வந்துசெல்வது வ்ழக்கம். இந்நிலையில் நேற்று இரவில் (புதன்கிழமை) இங்கு ஒரு மாடியில் இருந்து கரும்புகையுடன் தீ பரவியது. இது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர் பலர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகினர். மீட்புப் பணி இன்று (வியாழக்கிழமை) நிறைவடைந்தது. கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, நான்ஜிங் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

ஈரானின் சிவப்பு கோடுகளை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது சமீபத்திய பாகிஸ்தான் தூதரகப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்