தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று (17) வாபஸ் பெறப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர்.
அதன்படி, அதனை வாபஸ் பெற அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, மனுவை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1