26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

‘நாய்பட்டிமுனை’ என்ற பெயர் ”நற்பிட்டிமுனை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘நாய்பட்டிமுனை’ என்ற பெயர் ”நற்பிட்டிமுனை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு!அறிவிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாய்பட்டிமுனை உப அஞ்சல்  அலுவலகம்    2024.04.02 அன்று தொடக்கம்  நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என்று பெயராக  மாற்றம் செய்யப்பட்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஜெ.எம்  றிஸான் (ஹாமி)  உட்பட நிர்வாகிகள் கொண்டு வந்ததை தொடர்ந்து 2024.05.31 திகதி  வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறித்த பெயர் மாற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இதன்படி குறித்த உப தபாற் கந்தோரின் பழைய விளம்பர பலகை அஞ்சல் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமாரவின் உத்தரவிற்கமைய    அகற்றப்பட்டு புதிய விளம்பலகை தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இனிவரும் காலங்களில் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயற்பாட்டை முன்னெடுத்த நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் உட்பட பலருக்கு நற்பிட்டிமுனை பொதுமக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?: பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பிரித்தானிய தமிழர் விடுதலை!

Pagetamil

Leave a Comment