சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத்  தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Date:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத்  தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அங்கஜன் இராமநாதன்  மேலும் தெரிவித்துள்ளதாவது” சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம்  150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பேற்றுக் கொண்டார்”எனத் தெரிவித்தார்.

அத்துடன் நிரந்தர மின்பிறப்பாக்கியைப்  பெற்று வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், அதற்கான அறையொன்றை (Generator Room) அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தினார் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்