79 வயதுடைய பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
தனியாக வசித்து வந்த இந்த வயோதிபப் பெண் கடந்த 27ஆம் திகதி பலாங்கொடை நகருக்கு அருகில் உள்ள தூரவெல ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற போது படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று காலை சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று பிற்பகல் பலாங்கொடை பதில் நீதவான் டி. எம். சந்திரசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று (08ஆம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1