கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக நடிக்கும் தான்யா

Date:

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் அடுத்து ஸ்டோன் எலிஃபன்ட் கிரியேஷன்ஸ் எனும் தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படம், ‘றெக்கை முளைத்தேன்’.

இதில், தான்யா ரவிச்சந்திரன், ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி அவர் கூறும்போது, “கல்லூரி இளைஞர்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

ஐந்து புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன். கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்