இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்து பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.
தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1