உலகின் ஆகப் பழமையான ஓவியம்….51,000 ஆண்டுக்கு முன் வரையப்பட்டது
ஒரு பெரிய சிவப்புப் பன்றியைச் சுற்றி மூவர் நிற்பது போல் காட்சியளிக்கும் ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் வரையப்பட்டது 51,000 ஆண்டுக்கும் முன்பு என்று சொல்லப்படுகிறது.
புதிய ஆராய்ச்சி ஒன்று அதன் வயதைக் கண்டுபிடித்திருக்கிறது.
உலகில் மனிதன் கைப்பட வரைந்த ஆகப் பழமையான ஓவியம் இது என்று கூறப்படுகிறது.
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் மற்றொரு குகையில் வேட்டையாடுவதைக் காட்டும் ஒரு பழைய ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வயது 44,000 ஆண்டு என்று கணிக்கப்பட்டது.
புதிய ஒளிக்கற்றைத் (Laser) தொழில்நுட்பத்தைக் கொண்டு ஓவியங்களின் வயது கணக்கிடப்படுகிறது.
ஒரு கதையைச் சித்திரமாக வரைந்து சொல்லும் பாணி தொன்றுதொட்டு இருந்துவந்துள்ளது என்பதற்கு இது சான்று என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஜெர்மனியில் இதற்கு முன் உலகின் ஆகப் பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. ‘சிங்க மனிதன்’ சிலை போன்ற அந்த ஓவியம் 40,000 ஆண்டுப் பழமையானது.