நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் கடந்த (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில்  காலமானார்.

இந்நிலையில், அவரது வெற்றிடத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சண்முகம் குகதாசன் திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டு நீண்ட காலமாக கனடாவில் வசித்து வந்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் போட்டியிட்டிருந்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றார்.

அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் அவர், நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கவுள்ளார்.

 

 

spot_imgspot_img

More like this
Related

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ – புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!

தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட...

‘ஒரு ரஷ்ய சிப்பாயின் கால் எங்கு அடியெடுத்து வைக்கிறதோ, அது நம்முடையது’: புடின்!

ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒரே மக்கள் என்றும், "அந்த வகையில் முழு உக்ரைனும்...

வாகனங்களின் அங்கீகரிக்கப்படாத பாகங்கள் ஜூலை 1 முதல் அகற்றம்!

வாகனங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத உபகரணங்கள் மற்றும் மாற்றங்களை அகற்றும் திட்டம் ஜூலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்