தமிழ் மக்களிடையே ஒற்றுமை இல்லை அண்மையில் எனது வீடு வந்த ரணில் விக்கிரமசிங்க கூறினார் இவ்வாறான இழி சொல்லுக்கு நாம் ஆளானோம் – சம்பந்தரே என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர் இவரின் இறப்பு தமிழ் மக்களிடையே ஓற்றுமையை குலைக்குமோ என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இன்றைய சூழலில் தமிழ் மக்களிடையே ஒற்றுமை விஷயமானது குறைவானதகவே காணப்படுகின்றது. அண்மையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்னை வந்து என்னுடைய வீட்டிலே வந்து சந்தித்தபோது உங்களால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடியாது என்று ஏழனமாக சொன்னார்.
அதாவது உங்கள் ஒற்றுமையின்மையினால் அது சாத்தியப்படாது என்று கூறினார். மற்றவர்களின் இவ்வாறான இழி சொற்களுக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது. இந்த ஒற்றுமையின்மையை எமது தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்து அகற்றுவது தான் இன்றைய பாரிய தேவைப்பாடாக எமக்குள் இருந்து வருகின்றது.
எம்மை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் நாம் இணைய முன் வர வேண்டும், முதாதையர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாது, நாளைய சந்ததிகளாகிய உங்களைப் போன்ற இளைஞர் யுவதிகளிடையே உங்களுடைய தான், நாம் தமிழர் ஒற்றுமையை எதிர்பார்க்க வேண்டும் அதனால் தான் பாரம்பரிய விளையாட்டு சுற்றுப் போட்டிகளை ஒழுங்குப்படுத்தி எமது நாளைய சந்ததியினர் இடையே குழுவாகக் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் சமூக உரிமைப் பாட்டையும் வளர்ந்து வருகிறது.
துரதிஷ்டவசமாக நேற்று இரவு திரு சம்பந்தர் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். சம்பந்தனின் பூதவுடலில் பார்க்க வேண்டும் என்று பயணிக்க இருக்கின்றேன். எதுவாக இருந்தாலும் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர் சம்பந்தர் அவர்களே.
தமிழ் மக்களின் மூத்த தலைவர் அவர் சுகமாக இருந்த காலத்தில் தமிழ் மக்களிடையேயும், கட்சிகளிடையையும், ஓரளவு ஒற்றுமை இருந்து வந்தது, இன்று எதுவாக இருந்தாலும், கட்சிக்குமையே ஓரளவு ஒற்றுமை இருந்தது, அவர்களின் கருத்தை மற்றவர்கள் கூறும் போதே எம்மிடையே ஒற்றுமை சீரழிந்தது அவர் அடுத்து என்ன நடக்க போகின்றது என்ற நிலையை எமக்கு தந்து விட்டு சென்று விட்டார் என , C.V.விக்கினேஸஃவரன் MP தெரிவித்துள்ளார்.




