மாலைத்தீவில் ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை கைது!

Date:

மாலைத்தீவில் ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

மாலைத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாலைத்தீவு பொலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரையும் தவிர, மேலும் இரண்டு பேரை இந்த வழக்கில் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷாம்னாஸ் மற்றும் ரமீஸ் இருவரும், முகமது முய்சு மாலைத்தீவு தலைநகர் மாலே மேயராக பதவி வகித்த காலகட்டத்தில், ​​மாலே நகர சபையின் உறுப்பினர்களாக அவருடன் பணியாற்றியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் மாலைத்தீவு அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்