காலி சிறைச்சாலையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி பலகொட பிரதேசத்தை சேர்ந்த கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் ஆவார்.
இந்த நிலையில் சிறையிலிருந்த சக ஊழியர்களால் தாக்கப்பட்ட இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1