இலங்கை

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள், கடைகள் எரிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 24 வயதான சந்தேக நபர் உடுவில் பகுதியில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்   கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, வாள்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சந்தேக நபர் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டபோது சந்தேக நபரை எதிர்வரும் 14ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க  நீதிவான் உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். குறித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜீவனை கைது செய்ய உத்தரவு

Pagetamil

கிளிநொச்சி வந்த வாகனம் விபத்து

Pagetamil

யாழில் நகைச்சுவை பாணி நிகழ்வு: தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போவதாக சில தனிநபர்களும், சிறு கட்சிகளும் உடன்படிக்கை!

Pagetamil

ஹிருணிகாவுக்கு பிணை

Pagetamil

ஊர்காவற்றுறை கோயிலில் நகை கொள்ளையடித்த உதவிக் குருக்கள் கைது!

Pagetamil

Leave a Comment