ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை பிரச்சாரத்திற்கு மத்தியிலும் அனைத்து பாடசாலைகளும் இன்று வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கிகளை பிரயோகித்தமைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் சுகயீன விடுமுறை பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளில் எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கை தீர்க்கக் கோரி நேற்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஒரு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1