சொந்த மகள்களின் நிர்வாண புகைப்படங்களை விற்று பணம் சம்பாதித்த முல்லைத்தீவுத் தாய் கைது!

Date:

தனது இரண்டு சிறு பிள்ளைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பல்வேறு நபர்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பி பணம் பெற்ற தாயை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 வயதான தாய் தனது 6 மற்றும் 13 வயதுடைய மகள்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 வயது சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் சந்தேகநபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தாயாரின் கைத்தொலைபேசியை பரிசோதித்த போது இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமின்றி, தனது அந்தரங்க புகைப்படங்களையும் அந்தப் பெண் வட்ஸ்அப் மூலம் பல்வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, சந்தேகநபருக்கு சமூக நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கு முடியும் வரை இரு மகள்களையும் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்