மட்டக்களப்பில் மௌலவியின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு

Date:

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பகுதியில் இன்று (14) முற்பகல் வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

இந்த வீட்டில் வசித்த இளம் பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

முற்பகல் வேளை குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சித்தீக் சிபானியா (32) என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இப்பெண்ணின் கணவர் அவுஸ்த்ரேலியாவில் இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடயவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளனர்.

காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம்: அரசியல் தலையீடு என சமூக ஊடகங்களில் விமர்சனம்!

யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் நீதிபதி ஆசீர்வாதம்...

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்