29.6 C
Jaffna
July 13, 2024
குற்றம்

அழகிய இளம் பெண்கள், நடிகைகள்… இலங்கையை அதிர வைத்த விபச்சார வலையமைப்பு: வசமாக சிக்கிய நடிகை!

நடிகைகள் மற்றும் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட்டு பணக்காரர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலுக்கு தலைமை தாங்கிய நடிகை ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் பாணந்துறை வலனையில் அமைந்துள்ள மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் நடத்தப்படும் பார்ட்டிகளின் போது, பணக்காரர்களுக்கு குடிபோதையில் உல்லாசமாக இருப்பதற்காக அழகான இளம் திரைப்பட நடிகைகளை, மூத்த நடிகை ஒருவர் சப்ளை செய்வதாகவும், மொபைல் டாக்ஸி சேவைகள் மூலம் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் அழகிகளை விநியோகித்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சில நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சில முக்கிய இரவு விடுதிகளுக்கு செல்வந்தர்களும் சமூகத்தின் உயர்மட்ட சிலரும் அழகிய நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு, இந்த மூத்த நடிகையை அணுகுவதும் தெரிய வந்துள்ளது. இந்த நடிகை மூலமாக, அழகான இளம் நடிகைகள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இந்த விபச்சார வலையமைப்பை நடத்திய நடிகை சுமார் 5 ஆபாசப்படங்களில் நடித்தவர் என்பதும் மேலும் பல டெலி நாடகங்களிலும் நடித்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி விபச்சாரத்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, கோடீஸ்வர தொழிலதிபரை போல காண்பித்து பொலிசார் தொலைபேசியில் நடிகையை அணுகி, 5 அழகான இளம்பெண்கள் தேவையென கேட்டுள்ளனர். எவ்வளவு பணமென்றாலும் தருவதென கூறியதையடுத்து, நடிகை, மேலும் 5 இளம் பெண்களுடன் குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்துள்ளார். பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் பயகம, அம்பாறை, பொரலஸ்கமுவ மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர். ஒருவர் திருமணமாகாதவர். கைதான 5 இளம் பெண்களும், கொழும்பில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்.

கைதான நடிகை, இளம் சினிமா மற்றும் தெலைக்காட்சி நாடக நடிகைகளை பணக்காரர்களுக்கு ரூ.45,000க்கு விற்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகைகளுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொழிலதிபர்களிடம் அவர் பேசிய பல ஓடியோ டேப்புகளையும் மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியை நடத்திய நடிகை மல்வானையில் வசிப்பவர் என்று மத்திய ஊழல் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நடிகை உள்ளிட்ட யுவதிகளை மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பெண்கள் வெளிநாட்டு மதுபானம் அருந்தியுள்ளனர் என்பதும், தொழிலதிபர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக நட்சத்திர ஹொட்டல் பார்ட்டிகளில் தொழிலதிபர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விபச்சாரத்தை நடத்தி வருவதாக கூறப்படும் நடிகையின் மொபைல் போனில் பிரபல நடிகைகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இருந்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து பெண் விடுதலை!

Pagetamil

பிரிந்த காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட கடற்படைச்சிப்பாய்க்கு விளக்கமறியல்!

Pagetamil

திருமணம் முடிந்த 4வது நாள் கடத்தப்பட்ட யுவதி: காதலனின் வீட்டிலிருந்து மீட்பு!

Pagetamil

நீதிபதிக்கு அல்வா கொடுத்தவரை தேடி வேட்டை!

Pagetamil

நிர்வாண கோலத்தில் இளம் மனைவியின் சடலம்… கணவனும், நண்பனும் கைது; பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா?

Pagetamil

Leave a Comment