27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதிக்குள் உயிரை மாய்த்த இளம் வைத்தியர்: காதல் விவகாரம் காரணமா?

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இன்று (12) இந்த சம்பவம் நடந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் பிரேம்குமார் கிரிசாந் (30) என்பவரே உயிரை மாய்த்துள்ளார். சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

கொழும்பை சேர்ந்த இவர், காதல் விவகாரத்தினால் உயிரை மாய்த்துள்ளார் என கருதப்படுகிறது. அவரது காதலியென கருதப்படும் யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையெடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினர்,  வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது, வைத்தியர் சடலமாக காணப்பட்டார்.

அவரது மூக்கிற்குள் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தது. அவர் ஏதோ ஒரு வகை மருந்தை செலுத்தி உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

Leave a Comment