26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் அரசு கட்சி தலைவரை சந்தித்த தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று காலை யாழில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது பிரதானமாக ஐனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அறுரகுமார திசாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் அடுத்த சில நாட்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட ஏனைய அரசியல் தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?: பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பிரித்தானிய தமிழர் விடுதலை!

Pagetamil

Leave a Comment