28.2 C
Jaffna
June 12, 2024
இலங்கை

20 நிமிடங்கள் பார்க்க ரூ.2500 … இளம்பெண்களை வைத்து ஆபாச கட்சிகள் நேரலை வர்த்தகம்: தப்பியோடிய 2 பெண்களால் சிக்கிய கும்பல்!

பேஸ்புக் மூலம் வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து, பெண்களுடன் நட்பாகி அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி இணையத்தில் நேரலையில் விற்பனை செய்ததுடன், ஆபாச வீடியோக்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரும் பெண் உதவியாளரும் இவ்வாறான காணொளிகளை இணையத்தில் விற்பனை செய்து பெரும் தொகையை சம்பாதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

நுகேகொட பகொட தேவால வீதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டபோதே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த இடத்தில் கிடைத்த ஐஸ், கஞ்சா, பல்வேறு நபர்களின் வங்கி அட்டைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள், கருத்தடை சாதனங்கள், மொபைல் போன்கள், மடிக் கணினிகள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

தேங்காய் எண்ணெய் விற்கும் இடமாகவும், பண்டிகை சாமான்களை வாடகைக்கு விடவும் இந்த வீடு இயங்கி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட பெண்கள், இளம்பெண்கள் இந்த இடத்தில் உடலுறவுக்காக விற்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் லலித் அபேசேகர  குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மற்றும் கொட்டதெனியவைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடைய இரண்டு பெண்கள், சில தினங்களுக்கு முன்னர் அந்த இடத்திற்கு வீட்டு வேலை செய்ய வந்திருந்த நிலையில், அவர்கள் தப்பிச் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டதெனியவைச் சேர்ந்த 34 வயதான பெண், குவைத்தில் சில காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த பாலியல் வலையமைப்பை நடத்திய ஆண், முகநூல் ஊடாக இந்த பெண்ணை தொடர்பு கொண்டு நட்பாகியுள்ளார்.  ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த அவர், மே 18ஆம் திகதி பகோடா வீதியிலுள்ள இந்த வீட்டிற்கு வேலை தேடிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகநூல் மூலம் தெரிந்த நபரின் அழைப்பின் பேரில் வேலை தேடி அங்கு சென்றிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நபர் 24 வயதுடைய கல்கெட்டி, ஹாலியெல பிரதேசத்தை சேர்ந்தவர். முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபரே, இந்த பெண்ணையும் வேலைக்கு அழைத்துள்ளார். அவர், வேலைக்காக பகோடா வீதியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.

நுகேகொட, பகொட, தேவால வீதியில் அமைந்துள்ள வீட்டில் தம்மை பூட்டி வைத்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபட வைத்து வீடியோக்களை இணையத்தில் நேரடியாக விநியோகித்ததாக இந்த இரண்டு பெண்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வு மண்டப அலங்கார பொருட்களை வாடகைக்கு விடும், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் இடத்திலேயே இவர்கள் முதலில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இவர்களை பலவந்தமாக மற்றவர்களுடன் உடலுறவு கொள்ள வைத்து, இணையம் வழியாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளனர். இதனை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும். 20 நிமிட வீடியோவை பார்க்க 2500 ரூபாய் வசூலிப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வீட்டில் இதற்கென ஒரு ஸ்டுடியோவும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு பாலியல் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் ரப்பரால் செய்யப்பட்ட பிறப்புறுப்புகளும் கூட இருந்தன. வீடியோ காட்சிகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளின் போது பெண்கள் அணிவதற்கு ஒதுக்கப்பட்ட பல வகையான உள்ளாடைகளையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இரண்டு பெண்களும் இங்கு தடுத்து வைக்கப்பட்டு பலவந்தமாக பாலியல் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பல பெண்கள் கூடுதல் வருமானத்துக்காக தாமாக முன்வந்து இங்கு வந்து பாலியல் காட்சிகளில் நடித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் அபேசேகர தெரிவித்தார்.

இந்த இரண்டு பெண்களையும் வைத்து, இந்த தம்பதியினர் ஏராளம் பாலியல் நேரலை ஒளிபரப்புக்களை மேற்கொண்டு பெருந்தொகை பணம் சம்பாதித்துள்ளனர். எனினும், இந்த பெண்களுக்குரிய பங்கை கொடுக்கவில்லை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. சம்பவத்தையடுத்து வீட்டை விட்டு ஓடிய இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மருத்துவ பரிசோதனைக்கு ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் பல பெண்களின் கைப்பைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்த கைப்பைகள் இந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பெண்களுடையது என சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்து தப்பிச் சென்ற இரண்டு யுவதிகளும், தப்பியோடும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இந்த மோசடியை நடத்திய பிரதான சந்தேகநபர் அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதான திருமணமாகாதவர். மோசடிக்கு உடந்தையாக செயற்பட்டவர், திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்த, காலி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஒரு பிள்ளையின் தாயாவார்.

இருவரும்  நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருள் உபயோகிப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடும் முன் பெண்களுக்கு ஐஸ் போதைப்பொருள் வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. பெண்கள் ஒப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு இந்த நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறே கடந்த காலங்களிலும் குறித்த இடத்தில் இருந்து பல பெண்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் மாயமான மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கினர்

Pagetamil

சாவகச்சேரி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Pagetamil

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதிக்குள் உயிரை மாய்த்த இளம் வைத்தியர்: காதல் விவகாரம் காரணமா?

Pagetamil

ஊர்காவற்றுறையில் மதுபானம் தேயிலைச்சாயமாக மாறிய சம்பவம்

Pagetamil

இந்திய தேர்தல் முடிவை துல்லியமாக கணித்த நிறுவனத்தின் இலங்கைத் தேர்தல்க் கணிப்பு!

Pagetamil

Leave a Comment